×

கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்

முத்துப்பேட்டை : கோடை வெப்பத்தால் நீர் நிலைகள் வற்றியதால் பறவைகள், கால்நடைகள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கடும் வெயில் காணப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்த்தால் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. அதனால் இப்பகுதியில் வலம்வரும் பறவைகள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடிச் செல்கின்றன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் தண்ணீர் இன்றி இருக்கின்றன.

இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மற்றும் பறவைகள் தண்ணீரை தேடிச் செல்லும் நிலை உள்ளது. இதில் முத்துப்பேட்டை அருகேயுள்ள பாண்டி மரைக்காகோரையாற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் வெயிலால் நேற்று ஏராளமான செங்கால் நாரைகள் முகாமிட்டு அதில் கிடைக்கும் சிறு, சிறு மீன்களையும் இரையாக்கிக் கொண்டதுடன் தாகத்தையும் தீர்த்துக் கொண்டதை காண முடிந்தது.

The post கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள் appeared first on Dinakaran.

Tags : Muthuppettai ,Thiruvarur district ,Dinakaran ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்